ரத்னகுமாரின் “29” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

ரத்ன குமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி வரும் ‘29’ படத்தின் ‘மேன்ஷன் குத்து’ பாடல் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரத்னகுமாரின் “29” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
Published on

2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘சீலேசீலே’ கடந்த மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு ‘29’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் சமீபத்தில் வெளியானது. இத்துடன் "Wake up Silk nation" என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில், ரத்னகுமாரின் ‘29’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘மேன்ஷன் குத்து’ வருகிற ஏப்ரல் 01-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com