டி55 படத்திற்கான இசைப் பணியில் சாய்!.. வைரலாகும் புகைப்படம்

தனுஷின் 55 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
டி55 படத்திற்கான இசைப் பணியில் சாய்!.. வைரலாகும் புகைப்படம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'இட்லி கடை. "தேரே இஸ்க் மெய்ன்" ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 30ந்தேதி வெளியாக உள்ளது.

'கர' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு டி 55 என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியான நடிகை ஸ்ரீ லீலா நடிக்க உள்ளார். மேலும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி55 படத்திற்காக இசையமைக்கும் பணியில் சாய் அபயங்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பணியின் போது தனுசுடன் எடுத்த புகைப்படத்தை சாய் அபயங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com