சல்மான்கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சல்மான்கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Published on

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சன்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது.

இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் துவங்கியுள்ளது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் சன்மான்கான் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com