சல்மான்கானின் கைக்கெடிகாரம் விலை ரூ.46 லட்சம்

சல்மான்கானின் கைக்கெடிகாரம் விலை ரூ.46 லட்சம்
Published on

இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அதிக சொத்துகளுடன் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார். ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம், லாபத்தில் பங்கு என்றெல்லாம் வருமானம் வருகிறது.

சமீபகாலமாக வித்தியாசமான ஆடம்பர கைக்கெடிகாரம் அணிந்தபடி நிகழ்ச்சிகளுக்கு சல்மான்கான் வருவதை பார்க்க முடிகிறது. இன்னொரு கையில் பிரேஸ்லெட்டும் அணிந்து இருக்கிறார். இரண்டுமே ஒரே நிறத்தில் உள்ளன. பிரேஸ்லெட் அவரது தந்தை சலீம்கானால் பரிசாக வழங்கப்பட்டது.

அதுபோல் கைக்கெடிகாரமும் அவருக்கு ஸ்பெஷலானது என்கின்றனர். அவர் அணிந்துள்ள கைக்கெடிகாரத்தின் விலை ரூ.46 லட்சம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் தங்கம், வைரம் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த கைக்கெடிகாரத்தை தனது அதிர்ஷ்டமான பொருட்களில் ஒன்றாகவே சல்மான்கான் கருதுகிறார்.எனவேதான் எப்போதும் இதை கையில் அணிந்து கொள்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து கொண்டு செல்கிறார். பிரேஸ்லெட், கைக்கெடிகாரத்தை தவிர்த்து வேறு எந்த ஆபரணங்களையும் அவர் தொடர்ந்து அணிவது இல்லையாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com