"கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கவுள்ள "கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா "கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, "கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 06.09 மணிக்கு வெளியாகும் என தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






