

சென்னை,
நடிகை ஸ்ரீலீலா சமீபத்திய பேட்டியில், சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் வரும். ஆரம்பத்தில் அது மிகவும் மனதை பாதித்தது. பலமுறை கண்ணீர் விட்டு அழுதுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அதிலிருந்து மீண்டு தனது வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார். “இப்போது பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன். தேவையானதை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன், தேவையற்றதை புறக்கணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளதாகவும் ஸ்ரீலீலா குறிப்பிட்டுள்ளார்.
பராசக்தி படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள படம் ‘உஸ்தாத் பகத் சிங்’, இதில் நடிகர் பவன் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.