மணிரத்னம், ஷங்கர் உள்பட 11 டைரக்டர்கள் தயாரிக்கும் படம்

தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டர்களாக உள்ள மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர்.
மணிரத்னம், ஷங்கர் உள்பட 11 டைரக்டர்கள் தயாரிக்கும் படம்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டர்களாக உள்ள மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர். இந்த நிறுவனத்தில் பிரபல டைரக்டர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்குதாரர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட நிறுவனம் சார்பில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்கள் போன்றவற்றை தயாரிக்கவும், நல்ல கதைகளை வைத்துள்ள திறமையான இளம் இயக்குனர்கள் மற்றும் புதுமுக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 11 இயக்குனர்களும் இணைந்து தயாரிக்கும் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது. மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com