

சென்னை,
விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அருவருக்கத்தக்கது எனவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
ஆளுநரின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது: ஏற்றுக்கொள்ள முடியாதது: அரசமைப்புக்கு எதிரானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுக்ள் இருக்கலாம். ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த பிரகாஷ் ராஜ், விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார். எனினும், தற்போதுள்ள அரசியல் சூழலில் விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.