சாரா அர்ஜுனை முத்தமிட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகர் ராகேஷ் பேடி

சாரா அர்ஜுனை, நடிகர் ராகேஷ் பேடி கட்டிப்பிடித்தது கழுத்தில் முத்தமிட்டது சர்ச்சையானது.

சாரா அர்ஜுனை முத்தமிட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகர் ராகேஷ் பேடி
Published on

'துரந்தர்' பட விழாவில் சாரா அர்ஜுனை, நடிகர் ராகேஷ் பேடி கட்டிப்பிடித்தது கழுத்தில் முத்தமிட்டது சர்ச்சையானது. 20 வயது நடிகையிடம் 71 வயது நடிகர் இப்படியா நடந்து கொள்வது?' என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து ராகேஷ் பேடி கொடுத்த விளக்கத்தில், "படத்தில் சாரா என் மகளாக நடித்திருந்தார். அவரை எங்கு பார்த்தாலும் மகளாக நினைத்து கட்டிப்பிடித்து அன்பு பாராட்டுவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read
என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்.. இயக்குனர் மீது நடிகை மோனலிசா பரபரப்பு புகார்

சாரா அர்ஜுனை முத்தமிட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகர் ராகேஷ் பேடி

தற்போது 'துரந்தர்-2' படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசியான நடிகரான மாறிப் போயிருக்கும் ராகேஷ் பேடி, 'தன் மீது சுமத்தப்பட்ட களங்கம் மனதை வாட்டுகிறது' என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "தந்தை-மகள் பாசத்தை இப்படி தவறாக சித்தரிக்கிறார்களே... என்று மனம் வேதனைப்பட்டேன். இந்த களங்க பேச்சு என் மனதை வாட்டி வருகிறது. அதேவேளை பலரும் எனக்காக பரிந்து பேசினார்கள். இங்கு எதையாவது பேசி சிக்கலை ஏற்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் சிக்கும் பிரபலங்களின் நிலை பரிதாபம் தான்” என்றார்.

Also Read
யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது- செல்வராகவன் பரபரப்பு பதிவு

சாரா அர்ஜுனை முத்தமிட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகர் ராகேஷ் பேடி
X

Daily Thanthi
www.dailythanthi.com