

தற்போது உருவாகி வரும் புதிய பாகம் முதலில் 2028-ம் ஆண்டு வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, 2027-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1999-ம் ஆண்டு வெளியான ‘தி மம்மி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெளியானது. இந்த இரு படங்களிலும் பிரெண்டன் ப்ரேசர், ரேச்சல் வெய்ஸ் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது உருவாகி வரும் புதிய பாகம் முதலில் 2028-ம் ஆண்டு வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, 2027-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் பிரெண்டன் ப்ரேசர், ரிக் ஓ'கானல் என்ற கதாபாத்திரத்திலும், ரேச்சல் வெய்ஸ், ஈவி கார்னஹான் என்ற கதாபாத்திரத்திலும் மீண்டும் நடிக்கின்றனர். இவர்களுடன் முந்தைய பாகங்களில் நடித்த ஜான் ஹன்னா, ஓடெட் பெர், கெவின் ஜே. ஓ'கானர் உள்ளிட்டோரும் இணைகின்றனர்.
‘ஸ்க்ரீம்’, ‘ரெடி ஆர் நாட்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற மாட் பெட்டினெல்லி-ஒல்பின் மற்றும் டைலர் ஜில்லெட் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். டேவிட் காக்ஷால் திரைக்கதை எழுதியுள்ளார். சீன் டேனியல் தயாரிக்கிறார்.
புதிய படத்தின் கதைக்களம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பழைய படங்களில் ரசிகர்களைக் கவர்ந்த பிரெண்டன் ப்ரேசர் - ரேச்சல் வெய்ஸ் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.