'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. காரணம் இதுவா?

பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. காரணம் இதுவா?
Published on

சென்னை,

நடிகரும் ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹரி ஹர வீரமல்லு'. இந்த படத்தினை கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளனர். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.

பல முறை தள்ளிப்போன இத்திரைப்படம் தற்போது வருகிற 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால்  படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது இப்படத்திற்கு இரண்டாம் முறை ரிலீஸ் தேதி ஒத்திவைப்பாகும். இப்படம் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவன் கல்யாணின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com