கமல்ஹாசனிடம் இருந்து கற்ற பாடம் இதுதான்..- லோகேஷ் கனகராஜ்

கார்த்திக் சுப்புராஜூம், லோகேஷ் கனகராஜூம் இணைந்து '29' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
கமல்ஹாசனிடம் இருந்து கற்ற பாடம் இதுதான்..- லோகேஷ் கனகராஜ்
Published on

சென்னை,

விது - பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் ரத்னகுமார் இயக்கிய '29' என்ற படத்தை கார்த்திக் சுப்புராஜூம், லோகேஷ் கனகராஜூம் இணைந்து தயாரித்துள்ளனர்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, "என் நண்பர்களுக்காகத்தான் நான் படம் தயாரிக்கிறேன். இயக்குனர் ரத்னகுமாரும் நானும் தெருத்தெருவாக பட வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறோம். அப்போது எங்களுக்கு அடைக்கலம், ஆதரவு கொடுத்தது கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் தான். அன்று எனக்கு அடைக்கலம் தந்த கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து எனது நண்பன் ரத்னகுமாருக்காக ஒரு படம் தயாரிப்பது பெருமை தருகிறது.

இந்த நிலைக்கு என்னை உயர்த்திய மக்களுக்கு நன்றி. நாம் வளரும் போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி ஆரம்பித்தது தான் எனது பட நிறுவனம். சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமாவிலேயே போடுவது என்பதை கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் கற்ற மிகப்பெரிய பாடம் அது. எனது பட நிறுவனம் மூலம் இனி திறமையான புதிய முகங்கள் சினிமாவில் எட்டிப் பார்க்கும். என்னை வளர்த்த சினிமாவுக்கு என்னால் முடிந்த அத்தனையும் நிச்சயம் செய்வேன்", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com