'மும்பையில் பிறந்தாலும் நான் தமிழ் பொண்ணுதான்' - நடிகை ஹன்சிகா

'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகனவர் ஹன்சிகா .
'Though I was born in Mumbai, I am a Tamil girl' - Hansika
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

அதனைத்தொடர்ந்து, 'எங்கேயும் காதல்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 'பிரியாணி', 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பின் 2022-ல் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில், மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், 'மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com