திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

நடிகர் விக்ரம் பிரபு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார்

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் தமிழில் கும்கி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சிறை உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் பிரபு தரிசனம்

இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் மனைவியுடன் சென்று அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com