வரலட்சுமி சரத்குமாரின் “சரஸ்வதி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

வரலட்சுமி சரத்குமார் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி நடித்துள்ள ‘சரஸ்வதி’ படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.
வரலட்சுமி சரத்குமாரின் “சரஸ்வதி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை. தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதற்படமான ‘சரஸ்வதி’ மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. நடிகையும் இயக்குநரும் என்ற தலைப்பில் ‘சரஸ்வதி’ படத்தின் சுவாரசியமான வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘சரஸ்வதி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com