விக்னேஷ் சிவன் டாப் இயக்குநர் போட்டியில் இணைந்துவிட்டார் - எஸ்.ஜே.சூர்யா

லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான ‘எல்.ஐ.கே’ படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
விக்னேஷ் சிவன் டாப் இயக்குநர் போட்டியில் இணைந்துவிட்டார் -  எஸ்.ஜே.சூர்யா
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

‘எல்.ஐ.கே’ திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.9.93 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.6.85 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் வரவேற்பு தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிட்டுள்ளார். அந்த பதிவில், “தியேட்டரில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். செம்ம ஹாப்பி. கோடை விடுமுறைக்கும் இப்படி ஒரு ட்ரெண்டி படமும் ஒன்னா சிக்கியிருக்கு. கொல குத்து தான். விக்னேஷ் சிவன் இப்போது டாப் போட்டியில் இணைந்துவிட்டார். அதற்கு சான்று அவரது பெயர் வரும் போது எழுந்த வரவேற்பு. உங்கள் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன், யோகி பாபு, சீமான் அண்ணன், தயாரிப்பாளர் லலித், நயன்தாரா மற்றும் அனிருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com