விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது.
விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com