ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் அது மாத பராமரிப்புக்கு இல்லை - ஆர்த்தி தாயார் பேட்டி

ரவிமோகன் - ஆர்த்தி விஷயத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்பதாக ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் அது மாத பராமரிப்புக்கு இல்லை -  ஆர்த்தி தாயார் பேட்டி
Published on

ரவிமோகன் - ஆர்த்தி தம்பதியின் இரண்டு பசங்களும் பள்ளிக் கட்டணம் மட்டுமே ரூ.86 லட்சம் வருகிறது. அதனை ரவிமோகன்தான் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என ஆர்த்தி தாயார் தெரிவித்தார்.

ரவிமோகன் - ஆர்த்தி விவாகரத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை கடந்த 2024ம் ஆண்டு விவகாரத்து செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாடகி கெனிஷாவுடன் இருந்த உறவு தான் இந்த விவகாரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் சில மாதங்கள் முன்பு கெனிஷாவும் ரவிமோகனை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு

இதற்கிடையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆர்த்தி தரப்பில் ரூ.40 லட்சம் கோரப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த நீதிமன்றம் மாதம் ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மகன்கள் ஆரவ் மற்றும் அயானை எவ்வித தடையுமின்றி சந்திக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரவி மோகனிடம் ரூ.40 லட்சம் மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்கு தருமாறு நாங்கள் கேட்கவில்லை. அந்த பணம் எல்லாருக்கும் பெரிய விஷயம். எனினும் எங்க தலையில் ரவிமோகன் வச்சிட்டு போன கடன் இருக்கிறது. 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எந்தவித சலுகையும் செய்யவில்லை. உணவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். ஆனால் போன்றவற்றிற்பள்ளிக் கட்டணம், உணவுக்கு செய்ய வேண்டியது கடமையாகும். ரவி மோகன் விட்டுச் சென்ற கடனால் வீடு ஜப்திக்கு வந்தது போன்றவையெல்லாம் எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத ஒன்றாகும்.

இரண்டு பசங்களும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் ஆண்டுக்கு பள்ளிக் கட்டணம் மட்டுமே ரூ.86 லட்சம் வருகிறது. அதனை ரவிமோகன் தான் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆர்த்தி, குழந்தைகள், ரவி மோகன் கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்கவில்லை. இப்போது மாதம் ஒருமுறை சனி, ஞாயிறு சந்திக்க வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. இனியாவது இந்த பிரச்னை சரியாக வேண்டும். எந்த தாயும் பிள்ளைகள் வாழ்க்கையை பிரிக்க நினைக்க மாட்டார். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணவில்லை. 10 ஆயிரம் பேரை கூப்பிட்டு தான் நிகழ்ச்சி நடத்தினோம் “ என்று சுஜாதா விஜயகுமார் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com