ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் வெளியாகிறது.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு
Published on

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'டான்' படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி - கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read
ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' படத்தின் டீசர் வெளியானது
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
'மை டியர் டாலி' - சினிமா விமர்சனம்
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? - வெளியான அறிவிப்பு

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் நெல்சல் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். இதனை போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com