

ராப் பாடகராக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் அர்ஜுன் பிரபாகரனும், பள்ளி ஆசிரியை ஆராத்யாவும் காதலிக்கிறார்கள். கடுமையான உழைப்பால் அர்ஜுன் பிரபாகரனுக்கு, வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பின்னணியில் திடுக்கிடும் பல சமூக விரோத செயல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடையும் ஆராத்யா, இதனை அனைவருக்கும் தெரிவிக்க நினைக்கிறார். இதற்காக காதலன் அர்ஜூன் பிரபாகரனுடன் மிகப்பெரிய ஒரு சம்பவத்துக்கு ஆராத்யா தயாராகிறார்.
இந்த சூழலில் அர்ஜுன் பிரபாகரனின் முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் முட்டுக்கட்டைகளை போடுகிறது. அதேவேளை ஆராத்யாவை தீர்த்து கட்டவும் ஒரு கும்பல் கொலை வெறியுடன் திரிகிறது.சுற்றி நடக்கும் சதி வேலைகளில் இருந்து அர்ஜுன் பிரபாகரன் ஆராத்யா ஜோடி தப்பித்தார்களா? தங்கள் கண்முன் நடக்கும் சமூக விரோத செயல்களை உலகறிய செய்தார்களா? என்பதே பரபரப்பான மீதி கதை.
புதுமுகம் என்பதாலோ அர்ஜுன் பிரபாகரனின் நடிப்பில் கொஞ்சம் பதற் றம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் முடிந்ததை முயற்சித்து கவனம் ஈர்த் துள்ளார்.அழகு தாண்டி அளவான நடிப்பிலும் கவர்கிறார் ஆராத்யா. சுப் பிரமணிய சிவாவின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. போலீஸ் அதிகாரி யாக வரும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக முனீஸ்காந்த் மற்றும் சுருளி, காயத்ரி உள்ளிட்ட அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதி வாளர் ஆர்.யுவராஜ். ஜீவாவின் இசை சுமார். அழுத்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் தடுமாற் றம் தெரிகிறது. ராப் இசைக்கு முக்கியத்துவம் தரும் இடங்களில், தாக் கம் இல்லாத காட்சிகள் யோசிக்க வைக்கிறது. லாஜிக் மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன.