விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததா ‘ஜனநாயகன்’? - சினிமா விமர்சனம்

விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததா ‘ஜனநாயகன்’? - சினிமா விமர்சனம்
Published on

சிறையில் கைதியாக இருக்கும் விஜய் அந்த சிறைக்கு பாதுகாவலனாக இருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். ஒரு விபத்திலும் இறந்து போகிறார்.

கௌதம் மேனனின் விருப்பப்படி அவரது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட துடிக்கிறார் விஜய். அவருக்கு தொடர் பயிற்சிகள் அளித்து அவரை ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் பல கொலைகளை அரங்கேற்றி அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைகிறார்.

இந்த சூழலில் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய பாபி தியோல் முடிவு செய்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் விஜய்.

மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் விஜய் பற்றி தெரிந்து பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார்.

பாபி தியோல் யார்? அவரது பின்னணி என்ன? விஜய்க்கும், அவருக்கும் உண்டான மோதல் என்ன? இந்தியாவில் அவர் செய்யத் துடிக்கும் சதி திட்டம் என்ன? இதை விஜய் முறியடித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய் ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும் தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.

அழகான கதாநாயகியாக வந்து போகிறார் பூஜா ஹெக்டே. காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

துறுதுரு நடிப்பால் கவர்கிறார் மமிதா பைஜூ.

வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

பிரகாஷ் ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.

விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

விஜய் என்ற கூர்மையான ஆயுதத்தை மிகவும் பதமாக கூர் தீட்டி ஆக்ஷன் விருந்து படைத்துள்ளார் இயக்குனர் எச்.வினோத். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் காட்சிகளாக அமைந்துள்ளன.

தளபதி மாஸ் காட்டிவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com