

பவிஷ் நாராயண் நடிப்பில் உருவான ‘லவ் ஓ லவ்’ படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடித்த படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்துள்ளார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட ‘லவ் ஓ லவ்’ படம் கடந்த ஜீலை 10ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.