திரையரங்குகளைப் பிடிக்கப் போவது யார்? ஒரே நாளில் 13 படங்கள் மோதல்

வரும் நவம்பர் 27-ந் தேதி ஒரே நாளில் 13 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
திரையரங்குகளைப் பிடிக்கப் போவது யார்? ஒரே நாளில் 13 படங்கள் மோதல்
Published on: 

சென்னை,

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், வரும் நவம்பர் 27-ந் தேதி ஒரே நாளில் 13 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாகும் வாரமாக இது அமைந்துள்ளது.

வெளியாகும் 13 திரைப்படங்கள்

அதன்படி,

• '606'

• 'சிட்டுக்குறிஞ்சி'

• 'டெலிவரி பாய்'

• 'கோ 2 கோ'

• 'ஜெடூசி'

• 'மதுர மோசடி'

• 'மின்னும் ஓர் இரவு'

• 'மௌன மொழிகள்'

• 'நெல்லை பாய்ஸ்'

• 'பேய் பிடிச்சிருக்கு'

• 'நிறம்'

• 'வட மஞ்சுவிரட்டு'

• 'சிக்னல் அட் 11:30'

ஆகிய திரைப்படங்கள் நவம்பர் 27-ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் ஈர்க்கும் திரைப்படங்கள்

இவற்றில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ள 'டெலிவரி பாய்' திரைப்படம் கவனம் பெற்றுள்ளது. முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'நிறம்' திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாக நடித்துள்ள 'மௌன மொழிகள்', சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11:30', ஆணவக் கொலைகளை மையமாகக் கொண்ட 'நெல்லை பாய்ஸ்' ஆகிய படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்?

கடந்த நவம்பர் 20-ந் தேதி வெளியான தனுஷின் 'ஓம்', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' ஆகிய படங்கள் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஒரே நாளில் 13 படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அறிவிக்கப்பட்டுள்ள படங்களில் சில, கடைசி நேரத்தில் வெளியீட்டைத் தள்ளிவைக்கவும் வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த வார வெளியீடுகளையும் சேர்த்து 2026-ம் ஆண்டில் வெளியான நேரடித் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 200-ஐக் கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

X