கோவை: அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை: அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
Published on

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அடுத்துள்ள உடையாம்பாளையம் பகுதியில் பழமைவாய்ந்த மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணப்பட்டாடை, அணிகலன்கள், ஆபரணங்கள், பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

கோவை கணபதி சத்திரோடு மணியகாரம்பாளையம் பிரிவில் அண்ணாநகர் பகுதியில் பழமைவாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவிலிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com