

* வெளிப்புற சாலை மட்டத்தை கணக்கிட்டு, அஸ்திவாரம் சற்று உயர்த்தி அமைக்கப்படும்போது, இரண்டுக்கும் மேற்பட்ட கன்சாலிடேஷன் செய்த பிறகே பில்லிங் மெட்டீரியல் இட்டு நிரப்பவேண்டும்.
* பேஸ்மெண்டு மட்டம் சரி செய்யும்போது வாட்டர் லெவல் டியூபில் நீர்க்குமிழிகள் இல்லாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
* அஸ்திவாரம், பெல்ட் கான்கிரீட், லிண்டல், மேல் தளம் அமைத்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் வாட்டர் லெவல் பார்க்க வேண்டும்.
* செங்கல் சுவர் அமைப்பில், பேஸ், லிண்டல், ரூப் ஆகிய மட்டங்களில் குத்துக்கல் வரிசை கட்டமைப்பாக இருப்பது சிறப்பானது.
* ஒரு நாளில் 5 அடிக்கு மேலாக செங்கல் சுவர்கள் அமைப்பது கூடாது.
* காலம், பீம் ஆகியவற்றுடன் இணைத்து செங்கல் சுவர் கட்டும்போது தக்க துளை ஏற்படுத்தி, கம்பி வலை மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்து இணைக்கப்பட வேண்டும்.
* சீலிங் பூச்சு பணிகளின்போது அதை சற்றே வெட்டு இரும்பு கொண்டு சிறியதாக கொத்திவிட்ட பிறகு பணியை செய்யவேண்டும்.
* ஒரே நாளில் சுவர்களுக்கு இரண்டு கோட்டிங்குகள் பூச்சு வேலைகள் செய்வது கூடாது.
* பிளம்பிங் பாயிண்டு, எலக்ட்ரிகல் பாயிண்டு ஆகிய பணிகளை முடிந்த பிறகே சுவர் பூச்சு வேலைகளை செய்யவேண்டும்.
* மெயின் டோர் அமைப்பில் அதன் அளவிற்கேற்ப 6 கிளாம்புகள் பொருத்துவது பாதுகாப்பானது.