இந்த வார விசேஷங்கள்: 17-3-2026 முதல் 23-3-2026 வரை

மதுரை, குன்றக்குடி, திருச்சுழி, பழனி, சுவாமிமலை, லால்குடி, திருப்பரங்குன்றம் தலங்களில் மார்ச் 23ஆம் தேதி பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி
Published on

இந்த வார விசேஷங்கள்

17-ந் தேதி (செவ்வாய்)

* தொட்டியம் காளியம்மன் பவனி.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (புதன்)

* அமாவாசை.

* திருப்புவனம் கோதண்டராம சுவாமி, கம்பம் கம்பராயப் பெருமாள் தலங்களில் விழா தொடக்கம்.

* திருகண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (வியாழன்)

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை.

* திருப்புவனம் கோதண்ட ராம சுவாமி புறப்பாடு.

* தொட்டியம் காளியம்மன் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

20-ந் தேதி (வெள்ளி)

* தேவகோட்டை ரெங்க நாதர் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

21-ந் தேதி (சனி)

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* திருவாரூர் தியாகராஜர், திருப்புவனம் கோதண்டராம சுவாமி தலங்களில் புறப்பாடு.

* கம்பம் கம்பராயப் பெருமாள் திருவீதி உலா.

* சமநோக்கு நாள்.

Also Read
சென்னை காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்.. 19-ம் தேதி ஆரம்பம்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

22-ந் தேதி (ஞாயிறு)

* சதுர்த்தி விரதம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர், நாங்குநேரி வானமாமலை கோவில்களில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை பள்ளியறை சேவை, இரவு சூர்ணோற்சவம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.

* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (திங்கள்)

* கார்த்திகை விரதம்.

* மதுரை, குன்றக்குடி, திருச்சுழி, பழனி, சுவாமிமலை, லால்குடி, திருப்பரங்குன்றம் தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.

* திருச்செந்தூர் முருகன் பவனி

* திரிசிராமலை, கழுகு மலை, காஞ்சிபுரம், சென்னை தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

Also Read
திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜூன் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com