இந்த வார விசேஷங்கள்: 21-7-2026 முதல் 27-7-2026 வரை

திருவில்லிபுத்தூரில் 24ம் தேதி வெள்ளிக்கிழமை ஆண்டாள் புறப்பாடு, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
ஆண்டாள்-ரங்கமன்னார்
ஆண்டாள்-ரங்கமன்னார்
Published on

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

ஜூலை 21-ந் தேதி (செவ்வாய்)

* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி தீர்த்த உற்சவம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.

* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (புதன்)

* ஆடி சுவாதி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் பவனி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.

* மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.

* சமநோக்கு நாள்.

23-ந் தேதி (வியாழன்)

* ராமநாதபுரம் கோதண்டராமர் தீர்த்த உற்சவம்.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வெள்ளி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

* சமநோக்கு நாள்.

25-ந் தேதி (சனி)

* சர்வ ஏகாதசி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

* மதுரை கூடலழகர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

26-ந் தேதி (ஞாயிறு)

* பிரதோஷம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (திங்கள்)

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் விழா தொடக்கம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம்.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com