இந்த வார விசேஷங்கள்: 22-9-2026 முதல் 28-9-2026 வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் 27-ம் தேதி குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
சுவாமிமலை முருகப்பெருமான்
Published on

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

செப்டம்பர் 22-ந் தேதி (செவ்வாய்)

* சர்வ ஏகாதசி.

* சிரவண விரதம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை.

* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர், திருவில்லிபுத்தூர்

* பெரியபெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், நாட்டரசன் கோட்டை, குணசீலம் தலங்களில் எம்பெருமான் ரத உற்சவம்.

* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

24-ந் தேதி (வியாழன்)

* பிரதோஷம்.

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் கஜலட்சுமி வாகனத்தில் உலா.

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் சப்தாவர்ணம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (வெள்ளி)

* அனந்த விரதம்.

* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் தீர்த்தவாரி உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (சனி)

* பவுர்ணமி.

* உமாமகேஸ்வர விரதம்.

* கீழ்திருப்பதி சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (ஞாயிறு)

* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (திங்கள்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் ஊஞ்சலில் காட்சி.

* தேவகோட்டை ரங்கநாதர் பறப்பாடு

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com