ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம்

ஏராளமான பக்தர்கள் தங்கள் ராசிக்கு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில், சிறப்பு யாகம்
குருப்பெயர்ச்சி யாகம்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. கோவில் முதன்மை அர்ச்சகர்களான கருணா குருக்கள், டாக்டர் விசுவநாதன் தலைமையில் 108 சத சங்காபிஷேகம் நடத்தப்பட்டதோடு குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து யாகம் வளர்த்து பூர்ணாஹுதி நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி யாகத்தையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமானோர் தங்கள் ராசிக்கு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கொட்டே. சாய் பிரசாத், கோவில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com