

திருப்பதி,
திருமலையில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பதி மலைப்பாதையில் (திருமலை-திருப்பதி) 7-வது மைல் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன ஆஞ்சநேயருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் துணை அதிகாரி லோகநாதன், உதவி பறக்கும் படை அதிகாரி லோகநாதன், உதவி பறக்கும் படை அதிகாரி சுரேந்திரா மற்றும் பல்வேறு அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் உள்ளூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.
திருப்பதி கோதண்டராமர் கோவில், கோவிந்தராஜ சுவாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில், கடப்பா மாவட்டம் ஒண்டி மிட்டா கோதண்டராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள், வாகன சேவைகள் நடந்தன.