

மதுரை,
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் அம்மனும்-சுவாமியும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது. மேலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.