கள்ளழகர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா: 1-ந் தேதி தொடங்குகிறது

கள்ளழகர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.
கள்ளழகர்
கள்ளழகர்
Published on

மதுரை:

அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் மாசி பௌர்ணமி தினத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி 2-ந் தேதி கஜேந்திர மோட்ச விழா மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று சந்திர கிரகணம் நிகழ்வதால் முன்னதாக காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் சகல பரிவாரங்களுடன் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.

Also Read
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை
கள்ளழகர்

சுவாமியை பொய்கைகரைப்பட்டி கிராம மக்கள் வரவேற்று வணங்குவார்கள். தொடர்ந்து அன்று காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் தெப்ப உற்சவம், வழக்கம்போல் பூஜைகளுடன் நடைபெறும்.

மேலும் தெப்பக்குளம் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் மீண்டும், அங்கிருந்து வந்த வழியாகவே கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி பகல் 12 மணிக்குள் திரும்ப கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com