கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா தொடங்கியது

கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
நாகை கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய திருவிழா
புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
Published on

வேளாங்கண்ணி,

நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் ஆலயத்தின் வளாகத்தில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தேர் பவனி

திருப்பலியைத்தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அலங்கார பெரிய தேர் பவனி ஜூன 6ஆம் தேதி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com