திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டுவஸ்திர மரியாதை

மூலவர் பெருமாள், உற்சவர் நம் பெருமாள் மற்றும் தாயார் ஆகியோருக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டுவஸ்திர மரியாதை
Published on: 

திருச்சி,

108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசியையொட்டி நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பட்டுவஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவர் பெருமாள், உற்சவர் நம் பெருமாள் மற்றும் தாயார் ஆகியோருக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

முன்னதாக யானை மீது வைத்தப்படி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட பட்டுவஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்க விலாஸ் மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. பட்டுவஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் இடையிலான ஆன்மிக மரபு மற்றும் வைணவத் திருத்தலங்களின் பாரம்பரியத் தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் இந்த வஸ்திர மரியாதை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

X