கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்... திருத்தணி கோவிலில் தரிசனத்துக்கு நேரக் கட்டுப்பாடு!

குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோவில்
Published on: 

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி, வரும் 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மூலவர் முருகப்பெருமான் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன்படி, புஷ்ப அலங்காரம். பட்டு அலங்காரம், தங்ககவசம், திருவாபரணம், வெள்ளிக் கவசம், சந்தனக் காப்பு உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 15-ம் தேதி மாலை சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், மறுநாள் காலை உற்சவர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

நேரக் கட்டுப்பாடு

இதற்கிடையே, கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 10-ந்தேதி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் காலை 10.30 மணி வரை, 15-ந்தேதி மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை. இந்த நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X