

நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 5-ம் தேதி, பூச்சொரிதலுடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வாகன உற்சவம் நடைபெறுகிறது. ரிஷப வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் மகாலட்சுமி அவதாரம், வேணுகோபால் அவதாரம் என பல்வேறு திருக்கோலத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை செடல் உற்சவம் நடைபெறுகிறது.