

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான அண்ணாமலையார் கோவில் உள்ளது. பிரம்மனுன், திருமாலும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் காத்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அண்ணாமலையார் கோவிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தின் இன்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் சிகர நிகழ்வாக வரும் 24ம் தேதி மாலை திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. நடப்பு ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.