திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா

திருச்செந்தூரில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் 10-ம் நாளான நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா
சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வெள்ளத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Also Read
மாசிமக விழா... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கின்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Also Read
மாசி பிரம்மோற்சவ விழா: திருத்தணி முருகன் கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com