திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கையேடு வெளியீடு

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மார்ச் 17-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கான கையேட்டை  தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா வெளியிட்ட காட்சி
திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கான கையேட்டை தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா வெளியிட்ட காட்சி
Published on

திருப்பதி,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 17-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா பங்கேற்று பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட கையேட்டை வெளியிட்டுப் பேசினார்.

அவர் பேசுகையில், ‘திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மார்ச் 17-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. 16-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. மேலும் 19-ந்தேதி யுகாதி அஸ்தானம், 27 முதல் 29-ந்தேதி வரை ராமநவமி விழா, 30 முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை தெப்போற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, பகவானின் அருள்பெற்று செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

Also Read
திருமழபாடி நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் தேதி அறிவிப்பு
திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கான கையேட்டை  தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா வெளியிட்ட காட்சி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com