திருச்சி: திருநாராயணபுரம் பெருமாள் கோவில் தேரோட்டம்

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கங்கள் எழுப்பியபடி உற்சாகத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில் திருவிழா
தேரோட்டம்
Published on

தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு வேதநாயகித் தாயார் சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடிக்க தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள், "கோவிந்தா... கோவிந்தா..." என கோஷங்களை எழுப்பியவாறு, உற்சாகத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

போலீஸ் பாதுகாப்பு

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர் மலர்விழி, சர்க்கார் அருள்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார், முசிறி இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com