வேதாரண்யம்: சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலமறைக்காடர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்
மேலமறைக்காடர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்
Published on

வேதாரண்யம்,

பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் வேதாரண்யம் வேதமிர்த ஏரியில் அமைந்துள்ள தடாக நந்தீஸ்வரர், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் தாணிக்கோட்டகம் மேற்கு பார்த்த சிவன் ஆலயம் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Also Read
சீனிவாசமங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற புஷ்பயாகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேலமறைக்காடர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்
X

Daily Thanthi
www.dailythanthi.com