சிவில் சர்வீசஸ் மாதிரி நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

மாதிரி நேர்முக தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிவில் சர்வீசஸ் மாதிரி நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Published on: 

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமை பணிகள் தேர்வின் இறுதிக்கட்டமான ஆளுமை தேர்வுக்கு (நேர்முகத் தேர்வு) தயாராகும் தமிழக மாணவர்களுக்காக, சென்னை அரசினர் தோட்டம், பசுமைவழி சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.

79 பேர் தேர்ச்சி

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் இப்பயிற்சி மையத்தில், 2026-ம் ஆண்டு முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்களில் 29 பெண்கள், 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் வருகிற டிசம்பர் 7, 18 மற்றும் 19-ந் தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

• இந்த மாதிரி நேர்முக தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

• டிசம்பர் 7-ந் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்போர் தங்களது விண்ணப்ப விவரங்களை (DAF) டிசம்பர் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் டிசம்பர் 10-ந் தேதிக்குள் பதிவு செய்து, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும்.

• இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் மட்டுமின்றி, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பிற தேர்வர்களும் இதில் பங்கேற்கலாம்.

ரூ.5,000 பயணப்படி

மாதிரித் தேர்வில் தேர்வர்களின் செயல்பாடு வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும். மேலும், இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டெல்லியில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு சென்றுவர பயண செலவாக ரூ.5,000 வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X