சீருடைப் பணித் தேர்வுகளுக்கு 300 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி! - தமிழக அரசு அறிவிப்பு

சீருடை பணிகளுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேர்வு கால அட்டவணை குறித்தும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
சீருடைப் பணித் தேர்வுகளுக்கு 300 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி! - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Published on: 

சென்னை,

சீருடை பணி தேர்வுகளுக்கு 300 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விண்ணப்பங்கள்

சமூக நீதித்துறை ‘இலக்கு – சீருடை பணி தேர்வு பயிற்சி திட்டம்’ கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சீருடை பணி தேர்வு பயிற்சி திட்டம்

சென்னை – 05, ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், 2026–2027 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு எண்.31-ன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சீருடை பணிகளில் பணியமர்த்தும் நோக்கில், ‘இலக்கு – சீருடை பணி தேர்வு பயிற்சி திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு பயிற்சிகள்

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து தகுதியுடைய 300 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய இராணுவம் (Army), கடற்படை (Navy), விமானப்படை (Air Force), காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces – CAPFs) உள்ளிட்ட பல்வேறு சீருடைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

இப்பயிற்சியானது தங்குமிட வசதியுடன் கூடியதாகும். இதில், சீருடை பணிகளுக்கான எழுத்து தேர்வு பயிற்சி, வகுப்பறை பயிற்சி, சந்தேகத் தீர்வு அமர்வுகள், தொடர் மாதிரித் தேர்வுகள், உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி மற்றும் உடல் அளவீட்டு தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், சீருடை பணிகளுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேர்வு கால அட்டவணை குறித்தும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை [https://www.tnadw.tn.gov.in] வாயிலாக 11.12.2026 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X