

எழுத்துத் தேர்வில் (Written Examination) இடம்பெறும் கொள்குறி வகைக் கேள்விகளின் (Multiple Choice Questions) பிரிவுகளான எளிய நேரடிக் கேள்விகள் (Simple Straight Questions), தொகுப்புக் கேள்விகள் (Compiled Questions) பற்றிய விரிவான விளக்கத்தை கடந்த இதழில் தெரிந்துகொண்டோம்.
இனி - குழுக் கேள்விகள் (Group Questions), சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள் (The Truth of Statement Questions) மற்றும் பகுத்தறிவுத் திறன் கேள்விகள் (Reasoning Type Questions) பற்றி இப்போது பார்ப்போம்.
குழுக் கேள்விகளில் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த 4 விடைகளில் ஒவ்வொரு விடையும் சரியான விடைபோன்றே தோன்றும். இருந்தபோதும், ஒரு விடைக்கும் மற்ற விடைக்கும் இடையே சின்னஞ்சிறு வேறுபாடு இடம்பெறும். எனவே, ஒரு
விடையிலுள்ள வெவ்வேறு வார்த்தைகளுக்குள் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்துகொண்டு மிகச்சரியான விடையை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். குழுக் கேள்விகளுக்கு விடையளிப்பது சற்று கடினம் என்பதால் பெரும்பாலான உயர் பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளில் மட்டுமே இந்தக் கேள்விகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில்
சர்வீசஸ் தேர்வில் இவ்வகைக் கேள்விகள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் குரூப்-। மற்றும் குரூப்-।। ஆகிய தேர்வுகளில் இவ்வகைக் கேள்விகளில் இடம்பெறுவது உண்டு.
குழுக் கேள்விகளின் அமைப்பைப் பார்ப்போம்.
1. இந்தியாவில் கோதுமை உற்பத்தி அதிகமாக ஏற்படுத்தும் மாநிலங்கள்
(a) உத்திரபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா (b) உத்திரபிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்காளம்
(c) உத்திரபிரதேசம், பஞ்சாப், மேற்குவங்காளம் (d) உத்திரபிரதேசம், பஞ்சாப், மத்தியபிரதேசம்
2. கீழ்க்கண்டவற்றில் சரியான வரிசை முறையைக் கண்டறிக.
(a) மின்டோ மார்லி சட்டம், தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு
(b) மின்டோ மார்லி சட்டம், அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம்
(c) தன்னாட்சி இயக்கம், மின்டோ மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு
(d) அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், மின்டோ மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம்
3. பின்வரும் நான்கு அரச பரம்பரையினரை காலப்படி வரிசைப்படுத்தியதில் எது சரி?
(a) லோடி - துக்ளக் - அடிமை - கில்ஜி (b) துக்ளக் - அடிமை - கில்ஜி - லோடி.
(c) அடிமை - கில்ஜி - துக்ளக் - லோடி (d) கில்ஜி - அடிமை - லோடி - துக்ளக்
4. கருவியல் நிகழ்ச்சிகளை கண்டறிந்து அவற்றை வரிசைப்படுத்துக.
(a) கருக்கோளம், பிளவுபடுதல், இருபடைக்கோளம், முப்படைக்கோளம்
(b) இருபடைக்கோளம், கருக்கோளம், முப்படைக்கோளம், பிளவுபடுதல்
(c) முப்படைக்கோளம், இருபடைக்கோளம், கருக்கோளம், பிளவுபடுதல்
(d) பிளவுபடுதல், இருபடைக்கோளம், முப்படைக்கோளம், கருக்கோளம்
1.(c), 2. (a), 3.(c), 4.(c)
எழுத்துத் தேர்வில் இடம்பெறும் கொள்குறி வகை வினா வகைக் கேள்விகளில் “சொற்றொடர்களின் உண்மைநிலைக் கேள்விகள்” (The Truth of Statement Questions) இப்போது சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் எல்லா போட்டித் தேர்வுகளிலும் அதிகமாக இடம்பெறுகின்றது. இந்த வகைக் கேள்விகளில் பொதுவாக 4 வாக்கியங்கள் பதிலாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த 4 வாக்கியங்களில் எந்த வாக்கியம் சரியானது? எந்த வாக்கியம் தவறானது? என்பதைக் கண்டுபிடிப்பது போட்டியாளர்களுக்கு சவாலாக அமையும்.
கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளுமே சரியான விடையாகத் தோன்றுவதால், எந்த விடை மிகச் சரியானவை? எனக் கண்டுபிடிப்பது முதலில் குழப்பம் ஏற்பட்டுவிடும்.
பாடத்தைப் பற்றிய தெளிவான அறிவு கொண்டவர்களால் மட்டுமே மிகச் சரியான விடையை தேர்ந்தெடுக்க இயலும். இந்தியாவிலுள்ள சில சட்டங்கள், சில திட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே, ஒவ்வொரு மாநிலம் பற்றியும் தெளிவான அறிவை வளர்த்துக்கொண்டு தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்வது நல்லது. இதேபோல், அறிவியல் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களிலும், வரலாற்று நிகழ்வுகளிலும் கேள்விகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
இனி சில கேள்விகளைப் பார்ப்போம்.
1. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.
I. கொதித்தல் எல்லா வெப்ப நிலைகளிலும் நிகழும்.
II. ஆவியாதல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நிகழும்.
III. கொதித்தல் திரவத்தின் மேற்பரப்பில் நிகழும்.
IV. ஆவியாதல் திரவம் முழுவதும் நிகழும்.
மேலே சொன்ன கருத்துக்களில்
(a) அனைத்தும் சரியானவை
(b) அனைத்தும் தவறானவை.
(c) I மற்றும் II சரியானவை, III மற்றும் IV தவறானவை
(d) I மற்றும் III சரியானவை, II மற்றும் IV தவறானவை
2. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை கவனிக்கவும்:
I. மெளண்ட் பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்.
II. சி. இராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநர்.
III. சி. இராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர்.
IV. வல்லபாய் பட்டேல் தலைமை ஆளுநராக சி.ராஜாஜிக்குப்பின் நியமிக்கப்பட்டார்.
இவற்றுள்
(a) I மட்டும் சரியானது (b) I மற்றும் II சரியானவை
(c) I, II மற்றும் III சரியானவை (d) அனைத்தும் சரியானவை
3. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களை கால முறைப்படி வரிசைப்படுத்துக.
I. காந்தி இர்வின் உடன்படிக்கை Il. தண்டி யாத்திரை
Il. வெள்ளையனே வெளியேறு இயக்கம் IV. லாகூர் காங்கிரஸ்
மேற்கண்டவற்றின் சரியான வரிசை:
(a) IV II III
(b) II III I IV
(c) III II IV I
(d) IV III II I
4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. சிவாஜி சிறந்த படைத்திறன் மிக்க ஒருவர் II. சிவாஜி மராத்தியப் பேரரசினை உருவாக்கினார்
III. சிவாஜி சமய சகிப்புத் தன்மையுள்ளவர் IV. உழவர்களிடம் தாராளமாக
நடந்துகொண்டார்
இவற்றில்:
(a) I மட்டும் சரியானது (b) I மற்றும் II சரியானவை
(c) I, II மற்றும் III சரியானவை (d) அனைத்தும் சரியானவை
1. (b), 2. (c), 3. (a), 4. (d)
தேர்வு எழுதுபவர்களின் பகுத்தாய்வு செய்யும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் கேட்கப்படும் கேள்விகளை “பகுத்தறிவுத் திறன் கேள்விகள்” (Reasoning Type Questions) என அழைப்பார்கள். ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு விடையும் மிகச்சரியான விடைப்போலவே தோன்றும். எனவே கேள்வியிலுள்ள அடிப்படை உண்மையைக் கூர்ந்து கவனித்து மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.
1. மண்புழு உழவனின் நண்பன் எனப்படுவதன் காரணம்
(a) மண்ணின் கரிம மக்குப் பொருள்களின் அளவை அதிகரிப்பதால்
(b) மண்ணை மிருதுவாக மாற்றுவதால்
(c) மண்ணுள் காற்றுப்புகும் அளவை அதிகரிப்பதால்
(d) மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிப்பதால்
2. கீழ்க்கண்டவற்றில் எந்தத் தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
(a) அதிக வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
(b) குறைந்த வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
(c) அதிக வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
(d) குறைந்த வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
3. ஒரு செயலில் உள்ள குளிர்பதனப் பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்
(a) அந்த அறை குளிர்வடையும்
(b) அந்த அறை வெப்பமடையும்
(c) அறை வெப்பநிலை மாறாது
(d) குளிர்காலத்தில் அறையின் வெப்பநிலை உயரும். கோடை காலத்தில் அறையின் வெப்பநிலை குறையும்
4. பருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன.
(a) புவியானது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதால்
(b) புவியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால்
(c) புவியானது 2316 சாய்வாக சூரியனை சுற்றி வருவதால்
(d) புவி சூரியனைச் சுற்றிவர 36514 நாட்கள் எடுத்துக்கொள்வதால்
1. (c), 2. (b), 3. (c), 4. (c)
போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொதுஅறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுத விரும்புபவர்கள் தங்கள் தேர்வுத் தயாரிப்பை (Exam Preparation) முறைப்படி திட்டமிடுவது அவசியம்.
இனி - வேலையைப் பெறுவதற்கு உதவும் போட்டித் தேர்வுகள் பற்றியும், அந்த தேர்வுகளை நடத்தும் அமைப்புகளைப் பற்றியும் விரிவான விளக்கங்களையும் அடுத்து காண்போம்.