ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்

மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் 3 மொழிகளில், குறைந்தபட்சம் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்.
ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்
Published on

டெல்லி,

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 3வது மொழி கட்டாயம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதிய கல்விக்கொள்கையின்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மொழிகள் கற்பதை கட்டாயமாக்கி உள்ளது. கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் 3 மொழிகளில், குறைந்தபட்சம் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும். மூன்றாவது மொழிக்கு 10-ம் வகுப்பில் பொதுத் தேர்வு கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com