கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Published on

புதுச்சேரி

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 21-ந்தேதி நடந்தது. இதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் நாளை (சனிக்கிழமை) மாலைக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கல்லூரிகளில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது வருகிற 29-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com