எடெர்னோ ஸ்மார்ட் கடிகாரம்

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக எடெர்னோ என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
எடெர்னோ ஸ்மார்ட் கடிகாரம்
Published on

1.99 அங்குல டயலைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,999. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. சதுர வடிவிலானது. இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 5 நாட்கள் வரை செயல்படும்.

உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படக் கூடியது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, தூக்க குறைபாடு ஆகியவற்றை துல்லியமாக உணர்த்தும். நீலம், கருப்பு, சில்வர், பச்சை உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com