‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
Published on: 

நடிகர் தனுஷின் 43-வது படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com