நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ‘மங்குஸ்தான் பழம்’ சிறந்த தேர்வு

மங்குஸ்தான் மரம் வெப்பமண்டல காலநிலை உள்ள பகுதிகளில் செழித்து வளரும் மரமாகும்.
மங்குஸ்தான் பழம்
மங்குஸ்தான் பழம்
Published on

'பழங்களின் ராணி' என்ற பெருமைக்குரியது, மங்குஸ்தான் பழம். வெளியே அடர் ஊதா நிறத்திலும், உள்ளே பஞ்சு போன்ற வெள்ளை சதைப்பகுதியுடனும் காணப்படும். இனிப்பு மற்றும் மென்மையான புளிப்பு கலந்த சுவையால் தனித்துவம் பெற்ற இந்தப் பழம் ஆறு வெண்மை நிற பாகங்களையும் கொண்டிருக்கும். சுவை மட்டுமல்லாமல், உடலுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குணங்களையும் இயல்பாகவே கொண்டது மங்குஸ்தான் பழம்.

மங்குஸ்தான் மரம் வெப்பமண்டல காலநிலை உள்ள பகுதிகளில் செழித்து வளரும் மரமாகும். அதிக ஈரப்பதமுள்ள சூடான வானிலையே இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் சில ஈரப்பதமுள்ள பகுதிகளில் மங்குஸ்தான் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, ஆலஞ்சோலை, களியல், நெட்டா, மாறாமலை, வேளிமலை உள்ளிட்ட இடங்களில் மங்குஸ்தான் பழ மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த பழங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகம் விளைகின்றன.

ஊட்டச்சத்து:

இதில் நார்ச்சத்து. வைட்டமின் பி1, பி2, பி9 மற்றும் ஆண்டி ஆக்சிடென்டுகள், பொட்டாசியம், தாதுக்கள் நிறைந்துள்ளன.

நன்மைகள்:

ஜாந்தோன்கள் மற்றும் வைட்டமின் சி இந்த பழங்களில் அதிகம் நிறைந்து காணப்படுவதால், உடலை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஜாந்தோன்கள் என்பது பழங்களில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடென்ட் சேர்மங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மையை கொண்டவை.

இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தாதுக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

Also Read
உடல் எடை குறைப்புக்கு உதவும் ஆரஞ்சு, நெல்லிக்காய்
மங்குஸ்தான் பழம்

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலைத் தடுக்கிறது.

ஆன்டி-ஆக்சிடென்டுகள் சரும செல்களை பாதுகாத்து, இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகின்றன.

இந்த பழத்தில் பி-வைட்டமின்கள் இருப்பதால் உடல் ஆற்றல் மற்றும் செல்களின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

மங்குஸ்தான் பழத்தில் மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களும் உள்ளன. அவை தசைகள் வலுவாகவும், எலும்புகள் பலமாகவும், இதயம் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவுகின்றன.

Also Read
இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை ஒதுக்காதீங்க..
மங்குஸ்தான் பழம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com