லெனோவா எம் 10 டேப்லெட் அறிமுகம்

லெனோவா எம் 10 டேப்லெட் அறிமுகம்
Published on

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் லெனோவா நிறுவனம் புதிதாக எம் 10 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. 10.61 அங்குல திரை கொண்டுள்ள இந்த டேப்லெட்டின் விலை சுமார் ரூ.24,999. 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், ஸ்நாப்டிராகன் 695 ஆக்டாகோர் பிராசஸர், முக அடையாளத்தைக் கொண்டு செயல்படும் தொழில்நுட்பம் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸ் இசையை வழங்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இதில் 7,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளதால் இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்படும். பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 490 கிராம். புளூடூத் இணைப்பு வசதியை கொண்ட இதன் விலை சுமார் ரூ.24,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com